விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் - சேலம் மாவட்டம் தலைவாசல் இடையே அமைய உள்ள சர்வதேச கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைய உள்ள இடத்தை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், நபார்டு வங்கி உதவியுடன் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளது. சின்னசேலம் அருகே உள்ள கூட்டுரோடு ஆட்டுப் பண்ணையில், உலகத் தரம் வாய்ந்த கால்நடை பூங்கா அமைக்கப்படும்.
இங்கு கால்நடை ஆராய்ச்சி மையம், நாட்டின மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்கப்படும். நவீன முறையில் விவசாயம் செய்ய மாதிரி பண்ணை விவசாயம் மையம் ஏற்படுத்தப்படும். 50 ஏக்கரில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்படவுள்ளது, என்றார்.