ETV Bharat / state

கஞ்சா விற்பனை: 5 பேர் கைது - Villupuram Crime News

விழுப்புரம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Sale of cannabis in Villupuram
Sale of cannabis in Villupuram
author img

By

Published : Jul 29, 2020, 4:42 PM IST

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் விழுப்புரம் நகர காவல்நிலைய காவலர்கள் நேற்றிரவு அந்தப் பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பயாஸ் அகமது, இமானுவேல், கார்த்திக் ராஜா, கார்த்திகேயன் மற்றும் கணேஷ் ஆகிய 5 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.