துணிக்கடையில் தீ விபத்து: ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்! - fire accident in villuppuram
விழுப்புரம்: துணிக்கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து சாம்பலாகின.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான பிரபல துணிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இன்று (ஜூலை 4) எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருக்கோவிலூர் மற்றும் கண்டாச்சிபுரம் பகுதி தீயணைப்பு வீரர்கள் துணிக்கடையில் ஏற்பட்ட தீயை ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான ஜவுளி, பட்டுப்புடவைகள் எரிந்து சாம்பலாகின.
இது குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கும்போது, மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ’முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது’