ETV Bharat / state

அரசு ஊழியர் வீட்டில் 20 சவரன் திருட்டு!

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையில் அரசு ஊழியர் வீட்டில் 20 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட அரசு ஊழியரின் வீடு
author img

By

Published : Jun 17, 2019, 9:00 AM IST

உளுந்தூர்பேட்டை அடுத்த துர்கா நகரில் வசித்துவருபவர் ஆதிநாராயணன். இவர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அரசு ஊழியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி அங்குள்ள அரசுப் பள்ளில் ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார்.

இந்நிலையில் நேற்று ஆதிநாராயணனின் மனைவி வெளியூருக்குச் சென்று விட்டதால் வழக்கம்போல வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்றுள்ளார். இதை அறிந்த திருடர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 20 சவரன் தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்த தகவலறிந்த உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பட்டப்பகலிலேயே அரசு ஊழியர் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையில் அரசு ஊழியர் வீட்டில், 20 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

உளுந்தூர்பேட்டை அடுத்த துர்கா நகரில் வசித்து வருபவர் ஆதிநாராயணன். இவர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று தனது மனைவி வெளியூருக்கு சென்று விட்டதால் ஆதிநாராயணன் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்று உள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்த தகவலின் அடிப்படையில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.