விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேர் இன்று அதிகாலை சென்னை வேளச்சேரியில் இருந்து விருதுநகர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது, கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த கவுதம், வேல்பாண்டி, சுப்புலட்சுமி ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விக்ரவாண்டி காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காவல் துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.