விழுப்புரம் மாவட்டம், எஸ்.ஆர்.எஸ் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 69). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் கடந்த 24ஆம் தேதி கரோனா தொற்றல் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடல் சுகாதாரத் துறை அலுவலர்களின் அறிவுறுத்தலின்படி அடக்கம் செய்யப்படவுள்ளது.
இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு!