விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராயபாளையம் அருகே உள்ள மல்லிகைபாடி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பன். கல்வராயன் மலையில் இருந்து கோமுகி அணைக்கு செல்லும் ஓடை கால்வாய்க்கு அருகே சின்னப்பன் உட்பட பலரின் நிலங்கள் இருப்பதால், இவர்கள் ஓடையை ஆக்கிரமித்து பயிர் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் சின்னப்பனின் காட்டுக்கு அருகே மணிவண்ணன் என்பவரும் விவசாயம் செய்து வருகிறார். மணிவண்ணன் தனது காட்டுக்கு செல்ல பாதை இல்லாத காரணத்தினால் சின்னப்பன் ஓடையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.
அதனை விசாரித்த நீதிபதிகள் சின்னப்பனின் 31 செண்ட் இடத்தில் உள்ள ஆகிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி பொதுப்பணித் துறை அலுவலர்கள் சின்னப்பனுக்கு சொந்தமான 65 செண்ட் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். சின்னப்பன் தனது காட்டில் வாழை, தென்னை உள்ளிட்டவற்றை வைத்துள்ளதால் அறுவடை செய்யும் வரை கால அவகாசம் கேட்டுள்ளார்.
எனினும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் 5 லட்சம் மதிப்பிலான வாழை,தென்னை உள்ளிட்ட மரங்ககளை ஜே.சி.பி வாகனத்தை கொண்டு அகற்றியுள்ளனர்.
இது குறித்து பேசிய விவசாயி சின்னப்பனின் உறவினர் ராஜூ, தாங்கள் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை அரசு எடுத்து கொள்ளட்டும். ஆனால் ஓடை கால்வாயின் ஆக்கிரமிப்பை ஆரம்பத்தில் இருந்து எடுத்து வராமல் நடுவில் இருக்கும் எங்களது இடத்தை மட்டும் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். பயிர்களின் அறுவடை காலம் வரையில் அனுமதி கேட்டும் பதில் அளிக்காமல் ஆக்கிரமிப்பை செய்தது வருதமளிக்கிறது. எனவே இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும் என்று தெரிவித்தார்.