ETV Bharat / state

நடிகர் மாரிமுத்துவுக்கு சிலை: கவனத்தை ஈர்த்த பாஜக பிரமுகர்! - பிரதமர் மோடியின் தாயாருக்கு தமிழ்நாட்டில் சிலை

விழுப்புரம் அருகே பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மற்றும் தமிழ் சினிமா நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து ஆகியோருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிரதமர் மோடியின் தாயாருக்கு திருவுருவ சிலை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 7:09 PM IST

தமிழ்நாட்டில் பிரதமர் மோடியின் தாயாருக்கு திருவுருவ சிலை

விழுப்புரம்: மயிலம் அருகே தழுதாளி கிராமத்தில் பாஜக பிரமுகரான ராஜ கணபதி கோயில் ஒன்றை பராமரித்து வருகிறார். சமத்துவ கலை திருக்கோவில் என பெயரிடப்பட்டுள்ள இந்த வளாகத்தில் பல்வேறு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இங்கு பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரும் மறைந்த ஹீராபென் மோடி மற்றும் மறைந்த தமிழ் சினிமா நடிகரும், இயக்குநருமான மாரிமுத்துவுக்கு புதுச்சேரி பாஜக பிரமுகர் விக்கி(எ) ராஜகணபதியின் சொந்த செலவில் திருவுருவ சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைமாமணி ஜாக்குவார் தங்கம் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து சிறப்பித்தார்.மேலும் இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் மற்றும் தனியார் தொலைகாட்சியில் புகழ்பெற்ற எதிர்நீச்சல் தொடர் ஆதிகுணசேகரனின் (மாரிமுத்து) திருஉருவ சிலையும் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆர்த்தார் நீத்ம வேள்வி பூஜை செய்யப்பட்டது. மேலும்அவர்களின் ஆன்மா சாந்தி அடைய சிறப்பு பூஜையும் செய்யப்பட்டு, சுமார் 300-க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை அன்னதான உணவு வழங்கப்பட்டது.

அகமதாபாத்தில் உள்ள ஐநா மேத்தா மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் (100) உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு உயிரிழந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், குஜராத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 4 ஆம் தேதி, காந்திநகரில் உள்ள தனது தாயாரின் இல்லத்திற்குச் சென்ற மோடி, அங்கு தேர்தலுக்கு முன் ஆசி பெற்றார். முன்னதாக தன் தாயாரிடம் ஜூன் 18 ஆம் தேதி ஹீராபெனின் 100வது பிறந்தநாளில் பிரதமர் தனது தாயாருடன் நேரத்தை செலவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநரும், நடிகருமான நடிகர் மாரிமுத்து (56) கடந்த மாதம் 8 ஆம் தேதி காலை சீரியல் டப்பிங் பணியில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பால் இறந்தார். இதனைத்தொடர்ந்து, அவரது உடல் சொந்த ஊரான தேனி வருசநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது. இவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் புதுச்சேரியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் விக்கி என்கின்ற ராஜகணபதி அவரது சொந்த செலவில் இவர்களின் திருவுருவ சிலையை நிறுவியுள்ளார். இதனைக் காண அப்பகுதி மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதையும் படிங்க: பசும்பொன் தேவரின் தங்கக் கவசம் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.