விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்து உள்ளது கிராண்டிபுரம் கிராமம். இங்கு அரசு டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து டாஸ்மாக் கடை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இருப்பதால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாகவும், ஆபத்தாகவும் இருக்கும் என அந்தப் பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இன்று (பிப். 8) மனு அளித்தனர்.

டாஸ்மாக் கடை அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என அவர்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர். இதை மீறி டாஸ்மாக் கடை அமைக்கும் பட்சத்தில் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தொடரும் போராட்டங்கள்! - நெருக்கடியில் தமிழக அரசு!