விழுப்புரம் மாவட்டம் மஞ்சு நகர் பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நல்லசிவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனால் அவர் அப்பகுதி காவல்துறைக்கு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அந்தச் சோதனையில் மஞ்சு நகரில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்றுவருவது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த வீட்டிலிருந்த இரு பெண்கள் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தப் பெண்கள் தரகர்கள் மூலம் அங்கு விபச்சாரம் செய்துவந்தது தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை நடைப்பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: கல்லூரி மாணவிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட இரண்டு புரோக்கர்கள் கைது