தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் கரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டங்களை நடத்திவருகிறார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
இந்நிலையில், வருகிற 9ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதனிடையே, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் திடீர் மறைவை தொடர்ந்து, தற்போது இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உறுதிபடுத்தியுள்ளார்.