விழுப்புரம்: நேற்றிரவு(அக்.23) விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
மறுமுனையில் பேசிய அடையாளம் தெரியாத நபர், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், உடனடியாக அங்கிருக்கும் காவலர்கள் வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த தொலைபேசி எங்கிருந்து வந்தது என்பதை சோதனையிட்ட போலீசார், திண்டிவனத்தில் இருந்து வந்துள்ளதை கண்டுபிடித்தனர்.
பின்னர் காவல் கட்டுப்பாடு அறையை தொடர்புகொண்டு பேசிய திண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சேர்ந்த அஜய் வயது(23) என்பவரை விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஏடிஎம் மையங்களில் உதவுவது போல் திருட்டு - பர்தா அணிந்த பெண் கைவரிசை