விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் கணேசன், பாரிவள்ளல் என்பவருக்கும் ராஜசேகர் என்பருக்கும் 7.5 ஏக்கர் விவசாய நிலம் தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது.
இதுதொடர்பாக சகோதரர்கள் இருவரும் ராஜசேகர் மீது 11 முறைக்கு மேலாக விக்கிரவாண்டி காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் வாராந்திர குறைகேட்பு தினமான இன்று(நவ.30) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சகோதரர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனை அரசு அலுவலர்கள் யாரும் கண்டுகொள்ளாததால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை கடுமையாக தாக்கி வாகனத்தில் பலவந்தமாக ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தொழிலாளர்களை விட்டுவைக்காத லாட்டரி: நடவடிக்கைகள் என்ன?