கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, அத்தியாவசியத் தேவைகளின்றி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளின் இந்த அறிவுறுத்தலை சற்றும் மதியாமல் விழுப்புரம் மாவட்டத்தில் வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்கள் மீது இதுவரை 143 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:சாலையில் நடமாடிய மக்கள்; கிருமிநாசினி தெளித்து துரத்திய ஊழியர்கள்