விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள சாரம், ஒலக்கூர், ஆவணிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சமூகக் காடுகள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்தக் காடுகளில் புள்ளி மான்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.
இங்குள்ள வனவிலங்குகள் தண்ணீர், உணவுதேடி தேசிய நெடுஞ்சாலைகளை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு இறக்கும் சூழ்நிலை உள்ளது.
அதேபோல், சமூக விரோதிகள் மான் உள்ளிட்ட வனவிலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடுவது இப்பகுதியில் தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்நிலையில், திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்த புள்ளிமான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது.
உயிரிழந்த புள்ளி மானின் சடலத்தை ஒலக்கூர் காவல் துறையினர் கைப்பற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:மயக்க நிலையில் கருவுற்ற புள்ளிமான் மீட்பு!