விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே கடன் தொல்லையால் 5 பேர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்கொலை செய்து இறந்தோருக்கு தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.
அதில், " விழுப்புரம் மாவட்டம் புதுப்பாளையத்தில் கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்று விட்டு, தாயும், தந்தையும் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே இறந்தவர்களின் உடல்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து கூராய்வுக்கு பிறகு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ரிலைன்ஸ் சூப்பர் மார்க்கெட்டை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்