ETV Bharat / state

பாமக தொண்டர்களுக்கு ஷாக் கொடுத்த ராமதாஸ்.. விழுப்புரத்தில் நடந்தது என்ன? - Dr Ramadoss

விழுப்புரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸின் சில நிமிட பேச்சு, அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாஸின் சில நிமிட பேச்சு.. தொண்டர்கள் அதிர்ச்சி!

author img

By

Published : Dec 31, 2022, 3:26 PM IST

பாமக மாநில பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேச்சு

விழுப்புரம்: வானூர் அருகே நாவற்குளம் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் '2022ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம் 2023ஆம் ஆண்டை வரவேற்போம்' என்ற தலைப்பில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார்.

இந்த பொதுக்குழுவில் மறைந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து கட்சியின் வளர்ச்சி குறித்தும், நிர்வாகிகளின் உழைப்பு சம்பந்தமாகவும் ராமதாஸ் இயற்றிய ஆத்திசூடியை அறிமுகப்படுத்தினார்.

1.2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். உச்ச நீதிமன்ற ஆணைக்கிணங்க இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

2.ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஆளுநர் இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 80 சதவீத வேலை வாய்ப்பு தமிழர்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு துறையில் உள்ள 4 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும்

3.ஒரு லட்சம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கி, தமிழ்நாட்டில் நீர் பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் உள்ளது. அதன்படி ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழித்து போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.

4.தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்று, ஒரு லட்சம் ஆசிரியர்கள் புதியதாக நியமனம் செய்ய வேண்டும்.

5.நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதுச்சேரி அரசு பணிகளில் ‘பி’ பிரிவில் 18 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும். புதுச்சேரிக்கு மத்திய அரசு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத்தொடர்ந்து ராமதாஸ் பேசுகையில், "விடியலுக்காக காத்திருக்கிறோம். விடியலுக்கு வெகுதூரமில்லை’ என கூறினார். இவ்வாறு தன்னுடையே 45 ஆத்திசூடி மற்றும் ஒற்றை வாக்கியத்தை மட்டும் ராமதாஸ் கூறியதால், அது பாமக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே மணி, பேராசிரியர் தீரன், வழக்கறிஞர் பாலு, மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அரசாணை 149ஐ ரத்து செய்துவிட்டு தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர் நியமனம்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.