ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை - தீபங்கர் பட்டாச்சாரியா - Communist Party of India (Marxist–Leninist) Liberation Leader

விழுப்புரம்: பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்று இந்திய கம்யூனிஸ்ட்( மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார்.

திப்பங்கர் பட்டாச்சாரியா  இந்திய கம்யூனிஸ்ட்( மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்)  cpiml leader  Dipankar Bhattacharya  Communist Party of India (Marxist–Leninist) Liberation Leader  குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை
குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை-திப்பங்கர் பட்டாச்சாரியா
author img

By

Published : Dec 18, 2019, 3:26 PM IST

தமிழ்நாட்டிற்கு வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சாரியா, உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் உணவகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "தேசிய குடியுரிமை திருத்த மசோதா, இப்போது தேசிய குடியுரிமை சட்டமாக மாறி இருக்கிறது. இந்த மசோதாவை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றுவதற்கும் ஜனாதிபதி ஒப்புதல் பெறுவதற்கும் பிரதமர் நரேந்திர மோடி நேரத்தை செலவிட்டார்.

ஆனால் இந்திய மக்கள் இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, ஒட்டுமொத்த இந்தியாவும் அதை நிராகரித்துக் கொண்டிருக்கிறது. அசாமில் பொதுமக்களும், பல்கலைகழகங்களில் உள்ள மாணவர்களும் என நாடு முழுவதும் இந்த தேசிய குடியுரிமை சட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தேசிய குடியுரிமை சட்டம் என்பது மக்கள் குடியுரிமை பதிவேடு என்ற சட்டத்தை தொடர்ந்து வந்திருக்கிறது, இரண்டும் சேர்ந்து மிகப்பெரிய அளவுக்கு மக்களை பிளவுபடுத்துகிற நடவடிக்கையாகும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை-திப்பங்கர் பட்டாச்சாரியா

அசாமில் மட்டும் 20 லட்சம் பேர் இந்தத் திட்டத்தால் குடிமக்கள் இல்லாதவர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள், இதுபோல ஒட்டுமொத்த இந்தியாவிலும் கொண்டு வருவதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதில் இந்தியா முழுவதும் 4 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் நிலமற்றவர்கள், விவசாய தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள்தான் விவாதிக்க படுபவர்களாக இருப்பார்கள்.

ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வருகிற இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமையை வழங்க இந்தச்சட்டம் வழிவகை செய்கிறது. ஆனால், இலங்கையில் உள்ள இந்துக்களான தமிழர்கள் துன்புறுத்தப்பட்டனர். அங்கே மிகப் பெரிய இனப்படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது.

அங்கிருந்து இந்தியாவிற்கு அகதியாக வந்த தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க இச்சட்டம் வழிவகை செய்யவில்லை. இதனைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி மற்றும் இடதுசாரி அமைப்புகள் இணைந்து இந்தச் சட்டத்திற்கு எதிராக டிசம்பர் 19ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்திருக்கிறோம்.

இதுமட்டுமல்லாமல் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து ஜனவரி 8ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். இதில், தொழிற்சங்க இயக்கங்கள், விவசாய அமைப்புகள் என பல்வேறு அமைப்புகளைச்சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்." என்றார்.

இதையும் படிங்க: 'இந்தியா சர்வாதிகார நாடு அல்ல' - திருநாவுக்கரசர் எம்.பி.

Intro:tn_vpm_01_communist_agila_india_podhu_seylalalaar_byte_tn10026Body:tn_vpm_01_communist_agila_india_podhu_seylalalaar_byte_tn10026Conclusion:தமிழகம் வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் திப்பங்கர் பட்டாச்சாரியா உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் உணவகத்தில் செய்தியாளர் சந்தித்தார் !!

அப்போது அவர் பேசுகையில் :-

தேசிய குடியுரிமை திருத்த மசோதா என்பது இப்போது தேசிய குடியுரிமை சட்டமாக மாறி இருக்கிறது. இந்த மசோதாவை சட்டமாக்க அதற்கு நரேந்திர மோடி அவர்கள் பல நாட்கள் எடுத்துக் கொண்டார். மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றுவதற்கும் ஜனாதிபதி ஒப்புதல் பெறுவதற்கும் அவர் நேரத்தை செலவிட்டார். ஆனால் இந்திய மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை, ஒட்டுமொத்த இந்தியாவும் அதை நிராகரித்து கொண்டிருக்கிறது, அசாமில் பல்கலைகழகங்கள் நாடுமுழுவதும் இந்த தேசிய குடியுரிமை சட்டத்தை ஏற்றுக் கொள்ளாமல் போராடிக்கொண்டு இருக்கிறார்கள் தேசிய குடியுரிமை சட்டம் என்பது மக்கள் குடியுரிமை பதிவேடு என்ற சட்டத்தை தொடர்ந்து வந்திருக்கிறது, இரண்டும் சேர்ந்து மிகப்பெரிய அளவுக்கு மக்களை பிளவுபடுத்துகிறது நடவடிக்கையாகும்.

அசாமில் மட்டும் 20 லட்சம் பேர் இந்த திட்டத்தால் குடிமக்கள் இல்லாதவர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள், இதை போல ஒட்டுமொத்த இந்தியாவிலும் கொண்டு வருவதாக சொல்லி இருக்கிறார்கள் மூன்று அல்லது நான்கு சதவீகிதம் பேர் விடுபடுவார்கள் அல்லது விலக்கி வைக்கப்படுவார்கள் இதில் இந்தியா முழுவதும் 4 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் இவர்கள் நிலமற்றவர்கள், விவசாய தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், என்பவர்கள் தான் விவாதிக்க படுபவர்களாக இருப்பார்கள்.

ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான், ஆகிய நாடுகளிலிருந்து வருகின்ற இஸ்லாமிய அல்லாதவர்கள் குடியுரிமையை வழங்க படுவார்கள் காரணம் மத ரீதியாக துன்புறுத்தப்படுவது இலங்கையில் உள்ள தமிழர்கள் துன்புறுத்தப்பட்டு மிகப் பெரிய மனிதப் படுகொலை அங்கே நடத்தப்பட்டிருக்கிறது. இதனைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மற்றும் இடதுசாரி அமைப்புகள் இந்த சட்டத்திற்கு எதிராக டிசம்பர் 19ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்திருக்கும் இதுமட்டுமல்லாமல் இந்த போராட்டத்தை தொடர்ந்து ஜனவரி 8 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறோம் இதில் தொழிலாளர்கள், தொழிற்சங்க இயக்கங்கள், கிராம அமைப்பு, விவசாய அமைப்பு என பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டு குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என பேசினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.