ETV Bharat / state

மக்கள் மரங்களை நட்டு காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும் - வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

மக்கள் மரங்களை நட்டு காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
author img

By

Published : Jul 31, 2022, 7:54 PM IST

விழுப்புரத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், "விழுப்புரம் மாவட்டத்தில் 11.7 சதவீதமாக உள்ள வனப்பகுதியை 33 சதவீதமாக உயர்த்த அரசு திட்டங்களை வகுத்துள்ளது.

பொது இடங்கள், விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், நெடுஞ்சாலை பகுதிகள், பள்ளிகள், கோயில்கள் போன்ற இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்தால் மட்டுமே வனத்தினையும் சுற்றுச்சூழலையும் நம்மால் பாதுகாக்க முடியும். எனவே விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் தங்கள் பகுதிகளில் எந்த வகையான மரக்கன்றுகள் நட்டால் பலன் தருமோ அந்த மரக்கன்றுகளை அரசிடம் கேளுங்கள் வழங்குவதற்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

மேலும் பசுமையான தமிழ்நாட்டை உருவாக்க விவசாயிகள் அதிகளவு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நம்முடைய விவசாயிகளின் மிகப்பெரிய கோரிக்கை, குரங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட வனத்துறையின் மூலம் குரங்குகள் பிடிக்கப்பட்டு வனங்களில் விடப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை மேலும் தொடரும்.

விவசாய நிலங்களை பாம்புகள், காட்டுப்பன்றிகள் பயிர்களை நாசம் செய்வதாகவும் புகார் வந்த வண்ணம் உள்ளது. இவற்றை முற்றிலும் கட்டுப்படுத்த வனத்துறையின் மூலம் நடவடிக்கை தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காடுகள் உள்ள பகுதிகளில் விலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்து, பயிர் சேதங்களுக்கான இழப்பீடு உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மக்கள் வசிக்கும் பகுதிகளில் வன விலங்குகள் வருவதை தடுக்கும் வகையில் உரிய தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தாங்களாகவே போதுமான தடுப்புகளை அமைத்துக் கொள்ள வேண்டும்" என கூறினார். மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர், "தற்காலிக வனத்துறை பணியாளர்களுக்கு கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட ஊதியம் 6,000 தற்பொழுது 12,000 ஆக உயர்த்ப்பட்டுள்ளது. மேலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவது தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மற்றும் பெண் வனத்துறை அலுவலர்களுக்கு விரைவில் அவர்கள் பணி செய்யும் இடங்களிலேயே தனியாக கழிவறை கட்டுவதற்கு வழி வகை செய்யப்படும். மேலும் காட்டு பன்றிகளை மின்வேலிகளை கொண்டு கட்டுப்படுத்த இயலாது. அதற்கான மாற்று திட்டம் உள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் செயல்படுத்தப்படும். விழுப்புரம் அருகே உள்ள கழுவெளியில் விரைவில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சமூக வலைதளங்களில் புரொஃபைல் போட்டோவாக தேசியக்கொடியை வையுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.