ETV Bharat / state

திடீர் மழையால் நெல் மூட்டைகள் சேதம்! - நெல் மூட்டை சேதம்

விழுப்புரம்: செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதமானது.

திடீர் மழையால் நெல் மூட்டைகள் சேதம்!
திடீர் மழையால் நெல் மூட்டைகள் சேதம்!
author img

By

Published : Dec 17, 2020, 9:20 AM IST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் நேற்று பெய்த திடீர் மழையில் நனைந்து சேதமானது. இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின்பேரில் செஞ்சி வட்டாட்சியர் ராஜன் விற்பனை கூடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது விற்பனைக் கூடத்தில் மழையால் நனைந்து சேதமான நெல் மூட்டைகளைப் பார்வையிட்டார். அதன்பின் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பாஸ்கரன், விவசாயிகள் ஆகியோரிடம் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்ட மூட்டைகள்தான் மழையில் நனைந்ததாகவும் வட்டாட்சியர் ராஜன் தெரிவித்தார். மேலும், விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், விவாசயிகளுக்குத் தேவையான இட வசதிகள் குடோனில் செய்து தரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: நோடல் அலுவலரை நியமிக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.