சென்னையில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை நோக்கி நேற்றிரவு தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
இதில் 40 பயணிகள் பயணம் செய்துகொண்டிருந்த நிலையில், இப்பேருந்து அதிகாலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள சாரம் என்னும் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலையின் நடுவே இருந்த கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஒலக்கூர் காவல் துறையினர், காயம் அடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் பாருங்க: சேலத்தில் கோர விபத்து; பேருந்து ஓட்டுநர் பரிதாப உயிரிழப்பு!