ETV Bharat / state

நிவர் புயல்: விழுப்புரத்தில் ஆய்வுசெய்த மத்திய குழு - Ashtosh Agnihotri, Joint Secretary, Union Home Ministry

விழுப்புரம்: நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் இன்று (டிச. 07) நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

-cyclone-central-team
-cyclone-central-team
author img

By

Published : Dec 7, 2020, 7:37 PM IST

தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த 25ஆம் தேதி நிவர் புயல் தாக்கியது. இந்தhd புயலால் தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், கண்டமங்கலம், வானூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, மணிலா, பப்பாளி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின.

இந்நிலையில் நிவர் புயலால் தமிழ்நாடு, புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் இன்று (டிச. 07) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துவருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் களிஞ்சிக்குப்பம் பகுதியில் பயிரிடப்பட்டு, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மத்திய உள் துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் அஷ்டோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

தோட்டக்கலைத் துறை சார்பில் பயிரிடப்பட்டு புயலால் சேதமடைந்த பப்பாளி, வாழை, மரவள்ளி, கத்தரி உள்ளிட்ட பயிர்களின் மாதிரியையும் பார்வையிட்டனர்.

விழுப்புரத்தில் ஆய்வு செய்த மத்திய குழு

புயல் பாதிப்பு குறித்து அப்பகுதி விவசாயிகளிடம் கேட்டறிந்த மத்திய குழுவினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதையும் படிங்க: மழைநீர் கால்வாயில் விழுந்து தாய், மகள் உயிரிழந்த விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.