விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள அசகளத்தூரில் சபாபதி என்பவர் வீட்டின் முன்பு இருக்கும் வேப்பமரத்தில் பால் வடிந்துள்ளது. இதனைக் கண்ட சபாபதி அதிர்ந்து போனார். பின்பு அக்கம் பக்கத்தினரிடம் இதனை கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த தகவல் ஊர் மக்களிடம் அதிகமாக பரவியது. பின்னர் அங்கு திரண்ட அசகளத்தூர் கிராம பொதுமக்கள் பால் வடிந்த வேப்ப மரத்தினை ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.