ETV Bharat / state

மதுகிடைக்காத விரக்தி! மது பாட்டில்கள் கொள்ளை - விழுப்புரம் மாவட்டச் செய்திகள்

விழுப்புரம்: செஞ்சி அருகே அரசு மதுபான கடையை துளையிட்டு 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

tasmac
tasmac
author img

By

Published : Apr 7, 2020, 12:26 PM IST

உலகையே திக்குமுக்காட வைத்துள்ள கரோனா வைரஸ் தொற்று இந்தியாவையும் அச்சுறுத்திவருகிறது. கரேனா தொற்றை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 621 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், குடிமகன்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். அனுதினமும் மதுபானத்தால் உயிர்த்தெழுந்து வாழும் மதுப்பிரியர்கள் மதுபானம் கிடைக்காத சோகத்தை டிக் டாக் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானங்களை மறைத்து விற்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மதுபானத்தை திருடும் சம்பவமும் அரங்கேறுகிறது.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சிங்கவரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடையின் பக்கவாட்டு சுவற்றில் துளையிட்டு இன்று அதிகாலையில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: காவல் துறை தடியடியில் முதியவர் இறந்ததாகக் கூறி உறவினர்கள் சாலை மறியல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.