உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பேருந்து நிலையம் அருகில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் ஜமாத்துகள் சபை அனைத்து பள்ளிவாசல்களின் ஜமாத்தார்கள், பள்ளிவாசல் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், மக்களை பிளவுப்படுத்தி ஒற்றுமையை சீர்குலைக்க மத்திய அரசு முனைவதாக கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள், எதிர்க்கட்சி நிர்வாகிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்: 5 ஆயிரம் பேர் பங்கேற்பு!