விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் தாலுகாவில் இயங்கிவரும் அரசு கலைக் கல்லூரிக்கு இன்று விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கல்லூரி முதல்வர், பேராசிரியர்களிடம் கல்லூரியில் நிலவும் குறைகளையும் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் கல்லூரியில் உள்ள நன்மை, குறைகளை அவர் கேட்டறிந்தார். அப்போது மாணவ, மாணவிகளின் கோரிக்கையான கழிவறை, பேருந்து நிறுத்த நிழற்குடை, வகுப்பறைகளுக்கு தேவையான மேசை, கணினிகள் போன்ற குறைகளை நிவர்த்தி செய்துதருமாறு கேட்டுக்கொண்டனர். இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களிடம் அவர் உறுதியளித்தார்.
மேலும் பேராசிரியர்களுக்கு தேவையான மேசை, நாற்காலிகள் கல்லூரிக்கு கூடுதல் கட்டடம் மதில்சுவர் கட்டுவதற்கும் மிக விரைவில் நடவடிக்கை எடுத்து நிறைவேற்றித் தருவதாக அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவிகளின் பொங்கல் கொண்டாட்டம்!