விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நேமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்துவந்த இவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.
இவருக்கு சரசு என்ற மனைவியும் வைஷாலி என்ற ஆறு வயது மகளும் இருந்தனர். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் செவிலியாக பணியாற்றிவந்த சரசு, கணவர் இறந்த சோகத்தில் விருப்ப ஓய்வு பெற்று நேமூரில் உள்ள தனது தந்தை வீட்டில் மகளுடன் வசித்துவந்துள்ளார்.
தொடர்ந்து சில நாள்களாகவே சோகத்திலிருந்துவந்த சரசு தனது ஆறு வயது மகள் வைஷாலியை இடுப்பில் கட்டிக்கொண்டு இன்று காலை வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில்குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவலறிந்து வந்த விழுப்புரம் தீயணைப்புத் துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்கள் மேலோங்கினால் அதிலிருந்து மீள்வதற்குத் சினேகாவின் 044 -24640060 என்ற அழைப்புதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அதைத்தவிர தமிழ்நாடு அரசின் அழைப்புதவி எண்ணான 104-ஐ தொடர்புகொண்டும் பேசலாம்.
இதையும் படிங்க: ஒரே கயிற்றில் கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை!