விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண்மை இயந்திரமாக்கும் திட்டத்தின் கீழ் 3 விவசாய குழுக்களை சேர்ந்த 24 விவசாயிகளுக்கு ரூ.32 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டிலான டிராக்டர், நடவு செய்யும் இயந்திரம் மற்றும் கலப்பை ஆகியவற்றை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று (அக்டோபர் 24) வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் தற்போது புதிய கலாசாரம் ஒன்று உருவாகியுள்ளது. இந்து கடவுள்கள் மட்டுமல்லாமல் பிற மதத்தைச் சார்ந்தவர்களை புண்படுத்துவது, கொச்சைப்படுத்துவது என்ற நிலை இருந்து வருகிறது. பெரும்பான்மை மக்கள் நம்பிக்கை சார்ந்த விவகாரங்கள் குறித்து பேசும் போது ஜாக்கிரதையாக பேச வேண்டும்" என்றார்.
மனுதர்மத்தில் பெண்கள் குறித்து இழிவாக எடுத்துரைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அண்மையில் பெரியார் யூடியூப் சேனலில் பேசியிருந்தார். இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதனால், திருமாவளவன் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேவேளையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மனுஸ்மிருதி விவகாரம்: திருமாவளவனுக்கு ஆதரவாக களமிறங்கிய மு.க. ஸ்டாலின்!