விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவுப்பூங்கா மற்றும் நியாய விலைக் கடையை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.
-
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி, விக்கிரவாண்டி பேரூராட்சியில் ரூ.45.65 இலட்சம் மதிப்பிட்டில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா புதிய பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக l திறந்து வைத்தபோது. pic.twitter.com/b1fPVGzKye
— Dr.K.Ponmudy (@KPonmudiMLA) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி, விக்கிரவாண்டி பேரூராட்சியில் ரூ.45.65 இலட்சம் மதிப்பிட்டில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா புதிய பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக l திறந்து வைத்தபோது. pic.twitter.com/b1fPVGzKye
— Dr.K.Ponmudy (@KPonmudiMLA) October 5, 2023விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி, விக்கிரவாண்டி பேரூராட்சியில் ரூ.45.65 இலட்சம் மதிப்பிட்டில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா புதிய பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக l திறந்து வைத்தபோது. pic.twitter.com/b1fPVGzKye
— Dr.K.Ponmudy (@KPonmudiMLA) October 5, 2023
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், ‘தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை சார்பாக கோயில்களில் சிறப்பாக நிர்வாகம் நடைபெற வேண்டும் என்று அந்த காலத்தில் இருந்து கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அறநிலைத்துறையின் கீழ் சிறப்பாக நிர்வாகம் நடைபெற்று கொண்டிருக்கிறது. பிரதமர் வரலாறு தெரிந்து பேச வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள எந்த கோயிலாக இருந்தாலும் அதில் சிறப்பாக நிர்வாகம் நடைபெறுகிறது என்றால், அதற்கு காரணம் தமிழ்நாடு அறநிலையத்துறைதான். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் மற்றும் மகளிரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது, திராவிட மாடல் அரசு.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைக்கக்கூடிய, அயராது உழைத்துகொண்டிருக்கக் கூடிய ஒரே அமைச்சர் சேகர்பாபுதான். எந்த துறையாக இருந்தாலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைக்கக்கூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.
வள்ளலாரும், நந்தனாரும் சாதி வேறுபாடுகள் இருக்கக்கூடாது, கோயில்களுக்குள் அனைவரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றுதான் கூறினர். கோயிலுக்குள் அர்ச்சகர் ஆகலாம் என்று கூறி இருப்பது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.
திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்தார்கள், அது எடுபடாமல் போனது. அதுபோலத்தான் ஆளுநரும், பிரதமரும், தமிழகத்தில் மத வெறியைத் தூண்டிவிட்டு ஆதாயம் தேடக்கூடிய சூழ்ச்சிகள்தான். தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் ஆட்சி செய்யும் ஸ்டாலின் ஆட்சி நடைபெறுகிறது. பிரதமரும், ஆளுநரும் நினைக்கக்கூடிய காரியம் நடைபெறாது.
பிரதமர், நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை இயக்க வேண்டும். பிரதமரால் முடியுமா? முடியாது. தற்போது தமிழ்நாட்டில் அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை குறை சொல்லாமல் இருக்க வேண்டும்’ என்றார்.
இதையும் படிங்க:தென்னந்தோப்பில் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு.. கும்பகோணத்தில் பரபரப்பு!