விழுப்புரம்: இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் மண்டலம் சாா்பாக, ’வள்ளலாா் -200 முப்பெரும் விழா’ ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டு, அருட்பிரகாச வள்ளலாா் குறித்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கினார்.
பின்னர் விழா மேடையில் பேசிய அமைச்சர் மஸ்தான், “முதலமைச்சரின் உத்தரவின் படி, கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் வரை 52 வாரங்கள் அருட்பிரகாச 'வள்ளலாரின் 200-ஆவது பிறந்த நாள் விழா’, இந்து சமய அறநிலையத் துறை மூலம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட அருட்பிரகாச வள்ளலாா், 20 ஆம் நூற்றாண்டில் அவதரித்த ஜீவ வள்ளல் அவர். அனைத்து ஜீவராசிகளிடமும் அன்புகொள்ள வேண்டும் என்பதே அவரின் தாரக மந்திரம். சாதி, மத பேதமின்றி அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள் என்பதே அவர் கூறிய மந்திரத்தின் கருத்தாக உள்ளது. யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காகே சத்திய தருமச் சாலையை நிறுவிய வள்ளலார் மகானின் அறநெறிக் கொள்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்” இவ்வாறு உணர்ச்சி பொங்கத் கருத்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெரியார் சிலையை அத்துமீறி அகற்றிய விவகாரம் - வட்டாட்சியர், டிஎஸ்பி பணியிட மாற்றம்!