செஞ்சி ராஜா தேசிங்கு பள்ளியில் தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மதிவண்டிகள் வழங்கும் விழா இன்று (டிசம்பர் 30) நடைபெற்றது. அதனைத் தொடக்கிவைத்த சட்டதுறை அமைச்சர் சிவி. சண்முகம், மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர் மாணக்கர்களிடையே பேசிய அமைச்சர், ”தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மொத்தம் 43 லட்சம் மாணக்கர்கள் படிக்கிறார்கள். இந்த 43 லட்சம் பேர்களில், கடந்த 2 இரண்டு ஆண்டுகளில் நீட் தேர்ச்சி பெற்று மருத்துவ சேர்க்கையில் இடம் பெற்றவர்கள் எண்ணிக்கை வெறும் பத்துதான்.
நீட் வருவதற்கு முன்பு, நீட் வந்ததற்கு பின்பு என்று கணக்கிட்டால் தற்போது தான் அதிகளவில் மாணவர்கள் மருத்துவம் பயில்கிறார்கள். நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பு ஆண்டிற்கு அரசுப் பள்ளியில் பயின்ற 30 மாணவர்கள் மருத்துவ கல்வி பெற்றார்கள். நீட் தேர்வு வந்த பின்னர் ஆண்டிற்கு 10 பேர் சேர்ந்தார்கள்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியவில்லை என்றாலும் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கிய காரணத்தினால் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணர்வகளின் என்னிக்கை 430ஆக உயர்ந்திருக்கிறது.
நீட் தேர்வு வருவதற்கு முன்பு கூட அரசுப் பள்ளி மாணவர்கள் 30 பேர் தான் மருத்துவப் படிப்பு பயின்றனர். தற்போது 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கிற வகையில் திட்டத்தை வகுத்து இருக்கிறோம்"என்றார்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுறை, மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, செஞ்சி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மஸ்தான் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலையான மு.க. ஸ்டாலின்