ETV Bharat / state

திமுக தலைவருக்கு அறிவுரை சொன்ன அமைச்சர் சிவி சண்முகம்! - DMK Leader MK Stalin

விழுப்புரம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெறி சார்ந்த அரசியலை இனியாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் திமுக முகமற்று அழியும் எனவும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Minister CV Shanmugam criticises DMK Leader MK Stalin

author img

By

Published : Jul 2, 2020, 9:41 AM IST

இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இது வழக்கமான 'Lock up' மரணங்கள் போல் இல்லாமல் காவலர்கள், அரசு மருத்துவர், நீதிபதி, சிறை அலுவலர்கள் என பலர் மீதும் கடும் குற்றச்சாட்டுகளும், கவனக்குறைவு புகார்களும், எழுந்திருக்கும் நிலையில், முன்வைக்கப்படும் பலதரப்பட்ட ஐயங்களுக்கு விடை கண்டு அவர்களில் தவறு இழைத்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டிய தலையாய பொறுப்பு தமிழ்நாடு அரசு முன் நிற்கிறது. மேலும் இவ்வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நேரடியாக கண்காணித்து உத்தரவுகளை பிறப்பித்துவருகிறது. இதற்கிடையில் நடைபெற்றுவரும் சம்பவத்தின் கடுமை கருதி எவ்வித ஐயங்களுக்கும் இடம் தந்து விடக்கூடாது என்னும் நோக்கத்தோடு இந்த வழக்கை மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருக்கிறது. உடற்கூறு ஆய்வு முடிவுகள், முதல்கட்ட விசாரணையை தொடங்கியிருக்கும் நீதிபதி பாரதிதாசனின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் குற்றத்துக்கு உரியவர்களை இனம் கண்டு அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் கடுமையாக தொடர இருக்கிறது.

அதேவேளையில் இவ்வழக்கு விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடு அப்பாவி இருவரது இறப்பை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் திமுகவும், அதன் தலைவர் ஸ்டாலினும் திட்டமிட்டு சூழ்ச்சிகள் செய்வதாக தோன்றுகிறது. இதற்காக அவரது குடும்ப தொலைக்காட்சிகளும், அவர்களின் கூட்டணிக்கட்சி ஊடகங்களும் அரசின் மீது பழிபோடும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதை உணர முடிகிறது. 'Justice for jayaraj and Benicks' என்னும் பதாகைகளை தூக்கிப் பிடிப்பதும், விசாரணையை நடத்த சென்ற நீதிபதியை காவலர்கள் மிரட்டியதாக சொல்லப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு உட்பட விவகாரங்களில் நீதிமன்றம், காவல்துறை, ஆகியவற்றுக்குப் போட்டியாக அதற்கும் மேலானவர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் திமுக தாங்களே ஒரு விசாரணை அமைப்பை நடத்துவது போல நாடகமாடி வழக்கின் போக்கை குலைப்பதற்கும், அரசியல் ஆக்குவதற்கும் குடும்ப ஊடகங்களை வைத்து திமுக சதி செய்து வருகிறது. இதிலும் அரசியல் ஆதாயம் தேடும் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்” என்றார்.

மேலும், “அன்று கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை எதிர்த்து போராட்டம் நடத்திய அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமாரை அடித்து கொலை செய்துவிட்டு, பெற்றவர்களை பிடித்து வந்து தங்கள் பிள்ளையே இல்லை என்று சொல்ல வைத்த இவர்களைவிட, பெற்றோரது உன்னதத்தை உணர்ந்தவர்கள் நாங்கள். பட்டப்பகலில் மதுரை உயர் நீதிமன்றத்துக்கு எதிரில் பத்திரிகை ஊழியர்கள் மூவரை எரித்து படுகொலை செய்துவிட்டு, இன்று இவர்கள் ஜீவகாருண்யம் பேசுவது ரத்த காட்டேரி தான் சுத்த சைவம் என்று சொல்வதற்கு சமம்” எனக் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க...சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.