விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். ஓட்டுநரான இவர் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மினிவேனில் பால் ஏற்றி கொண்டு சென்றுள்ளார்.
மரக்காணம் அருகேயுள்ள கூணிமேடு பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியானது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமுற்று செல்வம் உயிருக்கு போராடினார். இந்த விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த காவலர்கள் செல்வத்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: டிராக்டர் விபத்து: தெலங்கானாவைச் சேர்ந்த 12 பேர் உயிரிழப்பு
!