ETV Bharat / state

மகளிர் சுய உதவிக்குழு என்ற பெயரில் ரூ.3 கோடி மோசடி! - காவல் நிலையத்தில் புகார்

கள்ளக்குறிச்சி: மகளிர் சுய உதவிக்குழு என்ற பெயரில் தனிநபர் கடன் தருவதாகக் கூறி பணம் வசூலித்து கோடிக்கணக்கில் மோசடி செய்த போலி நிறுவனத்தின் மீது அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

micro-finance-cheating-in-kallakurichi
micro-finance-cheating-in-kallakurichi
author img

By

Published : Dec 24, 2019, 6:44 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கூட்டுரோட்டில், கடந்த மாதம் SSB மைக்ரோ ஃபினான்ஸ் எனும் பெயரில் போலி நிதி நிறுவனம் ஒன்றை அருள் என்பவர் தொடங்கினார். அந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு முழுவதும் கிளைகள் உள்ளதாகவும், தான் அதில் கிளை மேலாளராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார்

தங்கள் நிறுவனத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தனி நபர் கடன் என ரூ. 50ஆயிரம் முதல் ரூ. 15 லட்சம் வரை கடன் வழங்க உள்ளதாகக் கூறி, அதற்கான 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களையும் நியமித்து சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் துண்டு பிரசுரங்களை வழங்கி விளம்பரப்படுத்தியுள்ளார்.

கடன் பெறுபவர்கள் மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்கள் ஒவ்வொருவரும் தலா ரூ. 1500 கட்டினால் கடன் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். அதில், தனிநபர் கடனுக்கு 1 லட்ச ரூபாய்க்கு ஆறாயிரம் வீதம் கடன் தொகைக்கு ஏற்ப 30 ஆயிரம் ரூபாய் வரையிலும் என ஏறக்குறைய 2500-க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ. 3 கோடிக்கு மேல் அருள் வசூல் செய்துள்ளார்.

சமூக ஆர்வலர் தனசேகர்

அதையடுத்து ஒரு மாதம் முடிவடைவதற்குள் திடீரென நிறுவனத்தை மூடிவிட்டு அவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் பாதிப்பிற்குள்ளானவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் குடியரசுத் தலைவர், ஆளுநர் பெயரை பயன்படுத்தி மோசடி' - இளைஞர் கைது!

Intro:tn_vpm_02_kallakurichi_microfinance_cheating_vis_tn10026.mp4Body:tn_vpm_02_kallakurichi_microfinance_cheating_vis_tn10026.mp4Conclusion:கள்ளக்குறிச்சி மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தனிநபர் கடன் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கூட்டு ரோட்டில் கடந்த மாதம் SSB - மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் போலி நிதி நிறுவனம் துவங்கி தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ளதாகவும் கூறி கிளை மேலாளராக உள்ளதாகவும் ,தங்கள் நிறுவனத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் தனி நபர் கடன் என 50 -ஆயிரம் முதல் 15 - லட்சம் வரை கடன் வழங்க உள்ளதாகவும் அருள் என்பவர் கூறி அதற்கான 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களையும் நியமித்து சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் துண்டு பிரசுரங்களை வழங்கி விளம்பரபடுத்தியுள்ளார்,மேலும் கடன் பெறுபவர்கள் மகளிர் கய உதவிக் குழுவில் உள்ள பெண்கள் ஒவ்வொருவரும் தலா 1500 ரூபாய் கட்டினால் கடன் வழங்கப்படும் எனவும்,தனிநபர் கடனுக்கு 1 லட்ச ரூபாய்க்கு 6-ஆயிரம் வீதம் கடன் தொகைக்கு ஏற்ப 30 ஆயிர ரூபாய் வரையிலும் என ஏறக்குறைய 2500-க்கும் மேற்பட்ட நபர்களிடம் 3 - கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த அருள் ஒரு மாதம் முடிவடைவதற்குள் திடீரென நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டார். இதனால் பாதிபிற்குள்ளானவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பேட்டி :
தனசேகர் (சமூக ஆர்வலர்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.