விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, கூவாடு கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகள் அனுஷ்யா. இவர் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் சமீபகாலமாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டார்.
இதைத் தொடர்ந்து அவரைத் தேடிப்பார்த்த பெற்றோர், உறவினர்கள் அவர் கிடைக்காத நிலையில் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே நேற்று காலை அதே கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக கிராமத்தினர் தகவல் தெரிவித்தனர்.
இதை அறிந்த உளுந்தூர்பேட்டை காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் சடலத்தை மீட்டபோது, அது காணாமல்போன அனுஷ்யா என தெரியவந்தது. அவரின் சடலத்தை மீட்ட காவல் துறையினர் உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: யார் வாகனம் இது? - விசாரிப்பதற்குள் போலீஸ் வாகனத்தை இடித்துவிட்டு விரைந்த டொயோட்டா ஃபார்ச்சூனர்!