ETV Bharat / state

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் மயான கொள்ளைத் திருவிழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் மயான கொள்ளைத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மயான கொள்ளை திருவிழா
மயான கொள்ளை திருவிழா
author img

By

Published : Mar 2, 2022, 10:39 PM IST

விழுப்புரம் : செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் பிரசித்திபெற்ற அம்மன் திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், மாசித் திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று மயான கொள்ளைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இத்திருவிழாவில், அங்காளம்மன் வேடமிட்ட பக்தர்கள் ஆக்ரோஷமான நடனமாடி, வாயில் உயிருள்ள கோழிகளைக் கடித்தும்; விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பயிரிடப்பட்டு விளைவித்த தானியங்களையும் காய்கறி, பழ வகைகளையும் மயானத்தில் படைத்தும் வழிபட்டனர்.

பின்பு, பக்தர்கள் மீது அதனை வாரி இறைத்தனர். அதனை தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்றால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்ற நோக்கில் பக்தர்கள் ஏராளமானோர் கொள்ளையிடப்பட்ட பொருட்களை ஆர்வமுடன் எடுத்துச்சென்றனர். மேலும் பக்தர்கள் அம்மன் வேடமணிந்து ஆக்ரோஷமாக நடனமாடி மயானத்துக்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

மயான கொள்ளை திருவிழா

அதுமட்டுமில்லாமல் வேண்டுதலாக திருநங்கைகள், பெண்கள் எனப்பல்வேறு பக்தர்கள் நடனமாடி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும் இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று மயானக் கொள்ளையை தொடர்ந்து தீமிதி மற்றும் தேர்த்திருவிழா நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சாம்பல் புதன்: உக்ரைனில் அமைதி திரும்ப சிறப்புப் பிரார்த்தனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.