விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தைக் காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டுச்செல்வது வழக்கம்.
இந்நிலையில் நள்ளிரவில் நடந்த வைகாசி மாத ஊஞ்சல் உற்சவத்தைக் காண ஏராளமான பக்தர்கள் மேல்மலையனூரில் திரண்டனர். அத்தருணம், எழிலரசி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது பூசாரிகள் தாலாட்டுப் பாடல்களைப் பாடி, அங்காளம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டினர்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டுச் சென்றனர். விழா ஏற்பாட்டினை மாவட்ட இணை ஆணையர் சிவக்குமார், திருக்கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: பாடலீஸ்வரர் கோவில் எல்லைக்கட்டும் திருவிழா; பக்தி பரவசத்தில் ஊரை சுற்றி வந்த இளைஞர்கள்!!