விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்து உள்ள காண்டாச்சிபுரம் வனப்பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுவருகின்றன. இதனால் வனப்பகுதியில் இருக்கும் உயிரினங்கள் பாதிக்கப்பட்டுவருவதாக அப்பகுதி சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இவ்வாறு கொட்டப்படும் கழிவுகள் உரிய அனுமதியுடன் நடத்தப்படும் மருத்துவமனைகளினால் கொட்டப்படுவதில்லை எனவும் அனுமதி பெறாமல் இப்பகுதியில் நடத்தப்படும் பல மருத்துவமனைகளால்தான் கழிவுகள் கொட்டப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் மருத்துவக் கழிவுகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும் சுகாதார துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இவ்வாறு கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் வனவிலங்குகளுக்கு ஆபத்து என எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கைவிடுக்கின்றனர்.