விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," "ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலையில் மத்திய அரசும் தமிழ்நாடு ஆளுநரும் ஏன் காலதாமதம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஏழு பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசின் ஊழல் முறைகேட்டுக்கு எல்லையே இல்லை. தமிழ்நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தமிழ்நாடு அரசில் அரசுப் பணியிடத்திற்கு பணியாளர்களை நியமனம் செய்ய பல லட்சம் ரூபாய் பணம் கை மாறுகிறது.
மத்திய அரசு வெளியிட்டிருக்கும் பட்ஜெட் முழுமையாக தோல்வி அடைந்த பட்ஜெட். இந்த பட்ஜெட்டால் அரசிற்கு வருமானம் உயரவில்லை. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்து வருகிறது மத்திய அரசு.
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு என்கிற போர்வையில் ராமதாசை விட வன்னிய மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் யாருமில்லை. மற்ற சமுதாய மக்களிடையே மோதலை உருவாக்க வேண்டுமென நினைக்கிறார் ராமதாஸ்" என்று குற்றஞ்சாட்டினார்.