ETV Bharat / state

பாதுகாப்பு கோரி காவல் கண்காணிப்பாளரை அணுகிய காதல் ஜோடி! - Married couple seek protection approached Villupuram SI

காதல் திருமணம் செய்த காதல் ஜோடி, விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு கோரி காவல் கண்காணிப்பாளரை அணுகிய காதல் ஜோடி

author img

By

Published : Oct 6, 2020, 6:37 PM IST

சென்னை, கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகள் திவ்யா (வயது 19). இவர் விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரும், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள வட ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் மகன் ராஜ்குமார் (வயது 21) என்பவரும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்களின் காதலுக்கு திவ்யாவின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். மேலும் தங்களது உறவினர் மகனான ஹரி என்பவரைத் திருமணம் செய்து கொள்ளும்படியும் அவர்கள் திவ்யாவைக் கட்டாயப்படுத்தி உள்ளனர். அதனைத் தொடர்ந்து, திவ்யா கடந்த 3ஆம் தேதி தனது வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். தொடர்ந்து 4ஆம் தேதி திருக்கோவிலூரில் உள்ள முருகன் ஆலயத்தில் ராஜ்குமாரை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் ராஜ்குமாரை தொடர்புகொண்ட திவ்யாவின் உறவினரான ஹரி என்பவர், இவர்கள் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் வடபழனி காவல் நிலையத்தில் திவ்யா - ராஜ்குமார் ஜோடி மீது புகார் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் மேற்படி புகார் சம்பந்தமாக நேரில் ஆஜராகும் பட்சத்தில் தனது தந்தை பணபலமும், அரசியல் பலமும் உடையவர் என்பதால் தங்கள் இருவரின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என்பதால், தனக்கும் தனது கணவருக்கும் தக்க பாதுகாப்பு வழங்கும்படி கேட்டு, விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை திவ்யா இன்று (அக்.06) அணுகியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.