ETV Bharat / state

கோயில் கிடா விருந்து: லாரி - டிராக்டர் விபத்து - படுகாயம்

விழுப்புரம்: கோயில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய கிராம மக்கள் மீது லாரி மோதிய விபத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

file pic
author img

By

Published : Jun 1, 2019, 12:30 PM IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மட்டிகைகுறிச்சி கிராம மக்கள் சின்ன சேலத்தில் உள்ள அய்யனார் கோயிலுக்கு கிடா விருந்துக்காக டிராக்டரில் சென்றனர். விருந்து முடிந்து தங்களது ஊருக்கு மக்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இவர்களது டிராக்டர் கடத்தூர் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது விழுப்புரத்தில் இருந்து வந்த மினி லாரி டிராக்டர் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும், டிராக்டரில் பயணம் செய்த இருபதுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த சின்ன சேலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Intro:TN_VPM_01_01_KALLAKURICHI_ACCIDENT_20_PERSON_INJURIES_SCRIPT_TN10026

Body:TN_VPM_01_01_KALLAKURICHI_ACCIDENT_20_PERSON_INJURIES_SCRIPT_TN10026

Conclusion:கள்ளக்குறிச்சி அருகே உள்ள மட்டிகைகுறிச்சி கிராமாத்தைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்டவர்கள் டிராக்டரில் சின்னசேலம் அருகே உள்ள வாசுதேவனுரில் உள்ள அய்யனார் கோவிலுக்கு கிடா விருந்துக்காக சென்றுள்ளனர். கோயிலுக்கு சென்றுவிட்டு டிராக்டரில் திரும்பிய போது கடத்தூர் அருகே விழுப்புரத்தில் இருந்து கட்டுமான பணிக்கு தேவையான தகரங்கள் ஏற்றி வந்த மினி லாரி அதிவேகமாக டிராக்டரின் ட்ரைலர் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் லாரியின் ஓட்டுனர்க்கு பலத்த காயம் ஏற்பட்டதுடன் லாரி நொறுங்கியது.மேலும் டிராக்டரில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னசேலம் போலீசார் படுகாயம் அடைந்த 20 க்கும் மேற்பட்டவர்களையும் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதில் 3 பேர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் விபத்து குறித்து சின்னசெலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சசம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.