விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, இன்று (மார்ச்.18) ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.
திருவிழாவைப் பயன்படுத்தி எந்த ஒரு அரசியல் கட்சி வேட்பாளரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது எனவும், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நிச்சயம் பின்பற்றப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான சுற்றரிக்கை அனைத்து அரசு அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பிகார் அனுபவத்தை வைத்து தமிழ்நாட்டில் தேர்தல் நடத்த ஆலோசனை : சத்யபிரதா சாகு தகவல்