ETV Bharat / state

விழுப்புரம் அருகே ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்

விழுப்புரம்: புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டிகளை, பனையபுரம் அருகே மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மதுபாட்டிகள்
author img

By

Published : Jul 9, 2019, 2:38 PM IST

விழுப்புரம் மாவட்டம் மதுவிலக்கு பிரிவு சிறப்பு ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையிலான காவல்துறையினர், இன்று காலை பனையபுரம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த வாகனத்தை சோதனையிடப்பட்டது. அதில் புதுச்சேரியிலிருந்து 20 பெட்டிகளில் 960 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள்

இதனையடுத்து, மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கடத்தி வந்தவர்களை கைது செய்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், விழுப்புரம் வடனூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், பூவரசன் எனபது தெரிய வந்தது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது.

Intro:விழுப்புரம்: பனையபுரம் அருகே ரூ.50 ஆயிரம் மதிப்பிலான புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய நபர்களை விழுப்புரம் மதுவிலக்கு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

Body:விழுப்புரம் மதுவிலக்கு சிறப்பு பிரிவு ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையிலான போலீஸார் இன்று காலை பனையபுரம் சந்திப்பு அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக புதுச்சேரியிலிருந்து சந்தேகத்திற்கிடமாக அதிவேகமாக வந்த PY-01-AU-4647 பதிவு எண் கொண்ட டாடா இண்டிகோ நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது அதில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 20 பெட்டிகளில் 960 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார் கடத்தலில் ஈடுபட்ட விழுப்புரம் வடனூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் பூவரசன் ஆகியோரை கைது செய்தனர்.

Conclusion:மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட மதுபாட்டிலில் மதிப்பு ரூ. 50 ஆயிரம் இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.