ETV Bharat / state

நீதிமன்றத்தில் பெண்ணை தாக்கும் வழக்கறிஞர் - வைரல் வீடியோ! - attacking

விழுப்புரம்: நீதிமன்ற வளாகத்தில் வைத்து வழக்கறிஞர் ஒருவர் பெண்ணைத் தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெண்ணை தாக்கும் வழக்கறிஞர்
author img

By

Published : Jun 26, 2019, 11:09 AM IST

விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அம்பிகா. இவர் தனது கணவர் சீதாராமனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், அம்பிகா, தனசேகர் என்ற வழக்கறிஞரிடம் ரூ. 5 ஆயிரம் கொடுத்து வழக்கை நடத்தி வந்த நிலையில், வழக்கை விரைவாக நடத்தவில்லை எனக்கூறி தனசேகரிடம் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார் அம்பிகா.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே சக வழக்கறிஞர்கள் முன்னிலையில் தனசேகர் அம்பிகாவை தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீதிமன்றத்தில் பெண்ணை தாக்கும் வழக்கறிஞர்

விழுப்புரம்: விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அம்பிகா. இவர் தனது கணவர் சீதாராமன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அம்பிகா, தனசேகர் என்ற வழக்கறிஞரிடம் ரூபாய் 5 ஆயிரம் கொடுத்து வழக்கை நடத்தி வந்த நிலையில், வழக்கை விரைவாக நடத்தவில்லை எனக் கூறி தனசேகரிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே சக வழக்கறிஞர்கள் முன்னிலையில் தனசேகர் அம்பிகாவை தாக்கி உள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.