ETV Bharat / state

செஞ்சி அருகே ஏரி உடைந்தது - 250 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் - ஏரி உடைந்து 250 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின

செஞ்சி அருகே அப்பம்பட்டு பகுதியில் உள்ள ஏரி உடைந்ததில் 250 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின.

செஞ்சி
செஞ்சி
author img

By

Published : Nov 23, 2021, 7:46 PM IST

விழுப்புரம்: கடந்த சில நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன. அப்பம்பட்டு, சென்னாலூர், புத்தகரம் உள்ளிட்ட இடங்களில் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறது.

அப்பம்பட்டு பகுதியில் உள்ள ஏரி உடைந்ததில் 150க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் (Flood) புகுந்தது. அப்பகுதியில் வசித்த மக்கள் 300 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ள நீர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 250 ஏக்கர் விளை நிலங்களில் சூழ்ந்ததால் (crop damage) பயிர்கள் சேமடைந்துள்ளது.

இந்நிலையில் அரசு சார்பில் இதுவரை எந்த உதவியும் வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சேதம் அடைந்த பயிர்களை கணக்கீடு செய்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: எங்க வீட்டு பெண்: காவல் நிலையத்தில் காவலருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.