விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த செங்கோல் மகன் யேசு ராஜா. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு குவைத் நாட்டிற்க்கு ஓட்டுநர் வேலைக்காக சென்றுள்ளார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் குவைத்திலிருந்து தன்னை தாயகம் திரும்ப அனுமதிக்குமாறு கடந்த 4 ஆண்டுகளாக கேட்டு வந்துள்ளார். ஆனால் இதற்கு செவி சாய்க்காத அவரது முதலாளி அவரை அனுப்ப மறுத்து வருகிறார். இதனால் மனமுடைந்த யேசுராஜா தனது குடும்பத்திடம் அங்குள்ள கஷ்டங்களை கூறியுள்ளார்.
தற்போது அவரது முதலாளி அவரை அனுப்ப கூடாது என்ற என்ணத்தில் யேசுராஜா வின் மீது வெளியுறவுத் துறையில் பொய் புகார் அளித்ததாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் யேசு ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குவைத்தில் தவிக்கும் கணவரை மீட்டு தாயகத்திற்கு அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது மனைவி பிச்சை மேரி கோரிக்கை விடுத்துள்ளார்.