விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த சலாவதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபாலின் மகன் ஜெகதீசன். இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று குற்றச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் மீது மயிலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்று ஜெகதீசனை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.
அதன் பேரில் இன்று ஜெகதீசனை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்த காவல் துறையினர், சென்னை மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.
இதையும் படிங்க:
ரூ.25 லட்சம் கேட்டு தொழிலதிபருக்கு கொலை மிரட்டல்: ரவுடி 'தில் பாண்டி'க்கு வலைவீச்சு