விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேவுள்ள வி.சாலை என்ற இடத்தில் அடுத்த மாதம் அதிமுக சார்பில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது.
அதற்கான பந்தல் அமைப்பதற்கான கோல்கால் பூஜை இன்று (பிப்.25) காலை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், சிவி சண்முகம், கே.பி அன்பழகன், தங்கமணி உள்ளிட்ட ஆறு அமைச்சர்கள் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனிசாமி, நேற்று (பிப்.24) சசிகலா கூறியிருந்த கருத்து குறித்த கேள்விக்கு,
கட்சிக்கு அப்பாற்பட்டு இருக்கின்றவர்கள் பல கருத்துளை கூறி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு அதிமுக தொண்டனும் உணர்வுப்பூர்வமான் இயக்கத்தின் மீது நீங்கா பற்று உடையவர்கள் இந்த குழப்பத்திற்கு ஆளாக மாட்டார்கள்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா 2ஆவது அலைக்கு வாய்ப்பில்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்!