நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் முக்கிய பண்டிகைகள், திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுவருகின்றன. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் கூவாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஒன்றுகூடி இந்த முடிவை எடுத்துள்ளனர். எனினும் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா அடுத்தாண்டு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.