ETV Bharat / state

எம்பி ஏற்பாட்டில் விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாம்! - இளைஞர்களுக்கு அழைப்பு

விழுப்புரம்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.

author img

By

Published : Feb 23, 2020, 8:02 AM IST

Updated : Feb 23, 2020, 8:18 AM IST

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார்

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துடன் (TNSRLM) இணைந்து விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மக்களவை உறுப்பினரால் SAGY திட்டத்தின்கீழ் தத்தெடுக்கப்பட்டுள்ள காந்தலவாடி கிராமத்தில் பிப்.26ஆம் தேதி அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று இளைஞர்களுக்கு அங்கேயே வேலை வாய்ப்புக்கான ஆணைகளை வழங்க இருக்கிறார்கள். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் முதுநிலை பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வரை எவர் வேண்டுமானாலும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

ஐடிஐ, பொறியியல் படித்தவர்களும் கலந்துகொள்ளலாம். முகாமில் பங்கேற்க வரும் இளைஞர்கள் தமது கல்விச் சான்றிதழ்களைக் கொண்டுவர வேண்டும். சுமார் ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கத்தோடு இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் பார்க்க: ‘இளைஞர்கள் வேலை தேடுபவர்கள் அல்ல, வேலைவாய்ப்பினை உருவாக்குபவர்கள்’

Last Updated : Feb 23, 2020, 8:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.